புவியதில் உறு பொருள் தரும் இறைத்துதியே
புகழ் மறை அருள் நபி வழியினைத் துதியே
( புவியதில்......)
அரணென மலை வளர் பதுளையின் நடுவே
அழகொளிர்க் கலைப் பயில் எமதுயிரான
அரசினர் தரும் அல்அதான் வித்தியாலயம்
ஆண்டு பல்லாண்டுகள் அவணியில் வாழ்க
( புவியதில்.......)
உலகியல் அறநெறி ஒருமுதல் இறைவன்
உளமிசை உயர்பெறும் எமது கல்லூரி
பலம்பெறும் அறிஞர்கள் படிமிசைத் தரவேண்டும்
பணிபுரிந்தாண்டு தொராண்டுகள் வாழ்க
( புவியதில்......)
மனுபுகழ் பெறுவதும் ஒழுகியல் பாலே
மதநெறி அது தரும் ஒரு கலையாமே
எனுமுறை ஔிபெற இதயமதில் நிதம்
இலங்கிடும் நமது வித்யாலயம் வாழ்க..
( புவியதில்......)